×

விலை உயர்வால் கேரட் அறுவடையில் விவசாயிகள் மும்முரம்

 

ஊட்டி, டிச. 30: மூன்று மாதங்களுக்கு பின் ஊட்டி கேரட் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் ஆறுவடையில் தீவிரம் காட்டி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் கேத்தி பாலாடா, முத்தோரை பாலாடா, நஞ்சநாடு, இத்தலார், கோலனிமட்டம், காட்டேரி, அணிக்கொரை, எப்பநாடு, கெந்தோரை, தும்மனட்டி போன்ற பகுதிகளில் அதிகளவு கேரட் பயிரிடப்படுகிறது.

இங்கு விளைவிக்கப்படும் கேரட் நாள் தோறும் டன் கணக்கில் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு கொண்டுச் செல்லபடுகிறது. ஆனால், கடந்த 3 மாதங்களாக ஊட்டி கேரட் விலை குறைந்து கிலோ ரூ.15 வரையில் மட்டுமே விற்பனையானது. இதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். அறுவடை கூலி, லாரி வாடகை, ஏற்று மற்றும் இறக்கு கூலி ஆகியவை வழங்க முடியாமல் தவித்து வந்தனர். இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக ஊட்டி கேரட் விலை உயரத்துவங்கியுள்ளது. தற்போது கிலோ ஒன்று ரூ.35 முதல் 40 வரை விலை போகிறது.

ஓரிரு நாட்களில் மேலும் கேரட் விலை உயர வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். தற்போது ஊட்டி கேரட்டிற்கு விலை அதிகம் கிடைக்கும் நிலையில், விவசாயிகள் அறுவடை செய்து வெளியூர்களுக்கு அனுப்புவதில் மும்முரம் காட்டி வருகின்றனர். தற்போது நாள் ஒன்றுக்கு டன் கணக்கில் கேரட் தற்போது மேட்டுப்பாளையம், சென்னை மற்றும் வெளி மாநிலங்களில் உள்ள மண்டிகளுக்கு கொண்டுச் செல்லப்படுகிறது. மூன்று மாதங்களுக்கு பின் ஊட்டி கேரட் விலை உயர்ந்து வருவதால், நீலகிரி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post விலை உயர்வால் கேரட் அறுவடையில் விவசாயிகள் மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Auruvadi ,Nilgiri district ,Kethi ,Palata ,Muthorai Palata ,Nanjanadu ,Italar ,Kolanimattam ,Katteri ,Niukkorai ,Eppanadu ,Kentorai ,Tummanatti ,
× RELATED பைக்காரா படகு இல்லம் செல்ல தடை நீண்ட...